சுடச்சுட

  

  குன்னூரில், இந்து முன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

  குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை, சேலாஸ், எடப்பள்ளி, சோலாடா மட்டம் உள்பட நகரப் பகுதிகளிலும், சிம்ஸ்பூங்கா, பேருந்து நிலையம் உள்ளிட்ட 108 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

  செப்டம்பர் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த விநாயகர் சிலைகள், குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லால்ஸ் நீர்விழ்ச்சியில் கரைக்கப்படவுள்ளன.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai