Enable Javscript for better performance
நீலகிரியில் இன்று அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    இம்முகாமில், முதியோர் ஓய்வூதியத் தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை வழங்கல், வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் வருமானச் சான்று, சாதிச் சான்று, விதவை சான்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த வாரத்திற்கான முகாம், உதகை வட்டத்தில் தும்மனட்டி சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் பேரட்டி சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் தக்கர்பாபா பழங்குடியினர் பள்ளியிலும், கோத்தகிரி வட்டத்தில் மிளிதேன் சமுதாயக் கூடத்திலும்,

    கூடலூர் வட்டத்தில் தேவாலா ஹட்டி அரசு ஆரம்பப் பள்ளியிலும், பந்தலூர்

    வட்டத்தில் கள்ளிச்சாலை அரசு உண்டு உறைவிடப் பள்ளியிலும் நடைபெறும் என

    மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai