சுடச்சுட

    

    முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி, முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அணிவகுப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, குட்டி யானைகள் மசினி, கிருஷ்ணன், பாரதி விநாயகருக்குப் பூஜை செய்தன. யானைகளுக்கு இனிப்பு, பொங்கல் உள்பட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், உதவி கள இயக்குநர் சந்திரன், கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, வனச்சரக அலுவலர்கள் ஆரோக்கியசாமி, காந்தன், ஞானதாஸ், சடையப்பன், வனவர்கள் ராஜேந்திரன், மனோகரன், கால்நடை மருத்துவர் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai