Enable Javscript for better performance
உதகையில் சாலைகளை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    உதகையில் சாலைகளை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

    By உதகை  |   Published on : 19th September 2015 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகையில் எட்டின்ஸ் சாலை, காந்தல் சாலையை சீரமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக, உதகை நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா தெரிவித்தார்.

     உதகை நகர்மன்றப் பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா ஆகியோர் நகரச் சாலைகள் மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்களை  வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

     அதைத்தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     உதகை நகரில் முக்கியச் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதன்படி, தலையாட்டுமந்து சாலை, சேரிங்கிராஸ் முதல் மத்தியப் பேருந்து நிலையம் வரையிலான எட்டின்ஸ் சாலை, ரோகிணி சந்திப்பு முதல் முக்கோணம் வரையிலான காந்தல் சாலை, பிரைடல் பாத் சாலை உள்ளிட்டவற்றை சீரமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதேபோல, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சோலார் மின் விளக்குகளை நகராட்சி நிர்வாகம் வாங்க மறுத்ததாகக் கூறப்படுவது தவறானதாகும். உதகையைச் சுற்றிலும் உள்ள அனைத்து காலனிகளுக்கும் கிடைக்கும் வகையில் கூடுதல் எண்ணிக்கையிலான சோலார் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     உதகையின் நுழைவாயிலான சேரிங்கிராஸ் பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரைத் தடுக்கும் வகையில் எட்டின்ஸ் சாலையில் குழாய் பதிக்கப்பட்டு பாதாள சாக்கடையுடன் இணைக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்த பின்னரே சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai