சுடச்சுட

    

    உதகை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

    By உதகை  |   Published on : 19th September 2015 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகையையொட்டி, உதகை கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

     இச்சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கி வைத்துப் பேசியது: உதகை கோ-ஆப்டெக்ஸ் கடந்தாண்டு தீபாவளியில் ரூ. 100.16 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. நடப்பாண்டில் விற்பனைக் குறியீடாக ரூ. 144 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

     கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன் கூறியதாவது:

     நடப்பாண்டில் தீபாவளிக்கு, கோ-ஆப்டெக்ஸ் மூலமாக 165 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் 202 விற்பனையகங்கள் இயங்குகின்றன. தமிழகத்தில் மட்டும் 165 விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன.

     கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் ரூ. 5 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல, ரூ. 5 கோடி வரையிலும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் வந்துள்ளன.   சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலும் ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டப்பட்டுள்ளது.

     ரூ. 75 கோடிக்கும் மேல் இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கோ-ஆப்டெக்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆர்கானிக் காட்டன் சேலைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து, லினன் ரக ஆடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தங்கமழை பரிசுத் திட்டமும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.

     இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், பொது மேலாளர் மனுவேல் ராஜ், நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai