சுடச்சுட

  

  தமிழ்நாடு நெஞ்சாலைத் துறை சார்பில், சாலைகளை கண்காணிக்கும் வாகனம் குன்னூர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

   கடந்த 3 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் ஆய்வு செய்யப்படுகிறது. அதனடிப்படையில், வெலிங்டன் - கோத்தகிரி, குன்னூர் - கோத்தகிரி, குன்னூர் - குந்தா, கேத்தி, பாலடா, சேலாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

   இந்த கண்காணிப்பு வாகனத்தின் மேல் பகுதியில் உள்ள 3 கேமராக்கள் மூலமாக சாலையில் உள்ள குறைபாடுகளை படம் எடுத்து, அதை ஜிபிஆர்எஸ் மூலமாக செயற்கை கோளுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலமாக, குண்டும் குழியுமான சாலை, மழைநீர் வடிகால் பராமரிப்பு, அபாயகரமான வளைவுகள், தடுப்புச் சுவர் தேவைப்படும் பகுதிகள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

   அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வாகனத்தின் உதவியுடன் மலைப் பாதையில் உள்ள குறைபாடுகளை நேரில் செல்லாமலேயே, உயர் அதிகாரிகள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நிதி ஒதுக்கீடு செய்ய ஏதுவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai