சுடச்சுட

    

    விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தையொட்டி, உதகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     நீலகிரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. உதகையில் சனிக்கிழமை விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நடைபெறுகிறது.

     இதில், விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா ஆகிய அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 46 சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.

     உதகையில் காந்தல் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் புறப்படும் இந்த ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அசெம்பிளி சந்திப்பில் நிறைவடைகிறது. அங்கிருந்து பிற்பகலில் கமர்சியல் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

     விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, உதகையில் காவல்துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

     இதில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை கண்காணிப்பாளர்கள் 30 ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், ஆயுதப்பிரிவு படையினர், போக்குவரத்து வார்டன் அமைப்பினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூடலூர்: கூடலூரில்  ஞாயிற்றுக்கிழமை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறவுள்ளது.  விசர்ஜன விழாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டி.எஸ்.பி. கோபி தலைமையில், காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

     ராஜகோபாலாபுரம் சந்திப்பில் துவங்கிய இந்த அணிவகுப்பானது, முக்கியச் சாலை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் நிறைவடைந்தது.

     இதில், கூடலூர் ஆய்வாளர் பாஸ்கர், மசினகுடி ஆய்வாளர் ஓம்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர்.

    குன்னூர்:  விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னனி சார்பில், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

     ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, நீலகிரி மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தலைமையில், குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி முன்னிலையில், காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai