Enable Javscript for better performance
அண்ணா பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியை அடுத்த கீழ்கோத்தகிரி அதிமுக சார்பில், அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

     கீழ்கோத்தகிரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, தேனாடு ஊராட்சித் தலைவரும், கீழ்கோத்தகிரி அதிமுக ஒன்றியச் செயலருமான ஸ்டீபன் தலைமை வகித்தார்.

     நெடுகுளா ஊராட்சி செயலர் ஜி.ஆர்.வி.கிருஷ்ணன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட இணைச் செயலர் வில்சன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். தலைமை கழகப் பேச்சாளர் தஞ்சை ரா.மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.

     இதில், ஒன்றியப் பொருளாளர் மணி, நிர்வாகிகள் விவேக், துரைசாமி, முருகேசன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai