சுடச்சுட

    

    முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சார்பில், சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

     புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள மாயார், மசினகுடி, முதுமலை, தொரப்பள்ளி, குனில்வயல் போன்ற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, இலவச குடல்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

     இம்முகாமிற்கு, நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தங்கவேல் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஜெகன்மோகன், கூடலூர் பகுதிக்கான உதவி இயக்குநர் அன்வர்தீன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன், வனச்சரக அலுவலர் காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai