சுடச்சுட

  

  உதகையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

   விநாயகர் சதுர்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த 80 சிலைகள் விசர்ஜனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

   காந்தல் முக்கோணம் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தல் பஜார், சேரிங்கிராஸ் வழியாக அசெம்பிளி சந்திப்பைச் சென்றடைந்தது. அங்கிருந்து கமர்சியல் சாலை வழியாக மின்வாரிய ரவுண்டானாவைச் சென்றடைந்து, அங்கிருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஞாயிற்றுக்கிழமை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், தேவாலா, நடுவட்டம், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில்

  இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உதகையில் சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்திலும், குன்னூரில் லாஸ் நீர்வீழ்ச்சியிலும், கோத்தகிரியில் உயிலட்டி நீர்வீழ்ச்சியிலும், கூடலூரில் இரும்பு பாலத்திலும் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.

   ஊர்வலங்களையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

   நீலகிரி மாவட்ட காவல்துறையினரோடு, வெளி மாநில காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவினருமாக 1,500 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai