Enable Javscript for better performance
கோத்தகிரியில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட மிளிதேன் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     முகாமிற்கு, நெடுகுளா ஊராட்சித் தலைவர் புவனாகுமார் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்வரி, கிராம நிர்வாக அலுவலர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கோத்தகிரி வட்டாட்சியர் ரவிகுமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து குடும்ப அட்டை, பட்டா பெயர் நீக்கம், சேர்த்தல், சிட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட 82 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai