சுடச்சுட

    

     உதகை, குன்னூர் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    உதகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் கூட்டுறவு பண்டக சாலையின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடை, குன்னூர் நிக்கல்சன் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடை ஆகியவற்றில் உள்ள பொருள்களின் இருப்பு, தரம், எடை ஆகியவற்றை பதிவேடுகளின் மூலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து குன்னூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு சாம்பார், தயிர் சாதம் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார், வட்டாட்சியர் ஜான் மனோகர், துணை வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai