சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக உதகை, குன்னூர் உள்ளிட்ட 12 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் சார்பில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், தேவாலா, பந்தலூர், நடுவட்டம், மசினகுடி, கேத்தி உள்ளிட்ட 12 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெற்றன.

    உதகையில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சேரிங்கிராசிலுள்ள தேவாங்கர் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர், அங்கிருந்து தொடங்கிய விசர்ஜன ஊர்வலம், கமர்சியல் சாலை, மார்க்கெட், மெயின் பஜார், மத்திய பேருந்து நிலையம் வழியாக காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு அனைத்து சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டன.

    இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சியில், மணியட்டி பிரகாஷ் சுவாமிகள், குன்னூர் சற்குரு ஆசிரம குருபிரகாச சுவாமிகள், இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேஷ், உதகை நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா ஆகியோர் பங்கேற்றனர்.

    கோத்தகிரியில்...: இந்து முன்னணி சார்பில், கோத்தகிரியில் பகுதியில் மொத்தம் 85 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் டானிங்டன் பகுதிக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் மாலை 3 மணியளவில் சிலைகள் ஊர்வலமாக காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பேருந்து நிலையம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு உயிலட்டி நீர் வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன.

    கூடலூரில்...: இந்து முன்னணி சார்பில், கூடலூரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள ஓம்சக்தி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை, மைசூரு சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தொரப்பள்ளி குனியல் ஆற்றில் கரைக்கப்பட்டன.

    இதேபோல், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், ராஜகோபாலபுரம் நகராட்சி அலுவலகம் அருகே துவங்கி விசர்ஜன ஊர்வலம், கோழிக்கோடு சாலை வழியாக இரும்புப் பாலம், பாண்டியாறு- புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் நிறைவடைந்து

    அங்குசிலைகள் கரைக்கப்பட்டன. பந்தலூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொன்னாணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai