புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்
By உதகை, | Published on : 21st September 2015 04:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஆய்வு செய்தார்.
உதகை நகராட்சிப் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் நடைபெற்ற புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்திற்கான முகாமை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து புனித தெரசா உயர்நிலைப் பள்ளி, புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றிலும், குன்னூர் கிராஸ்பஜார் நடுநிலைப் பள்ளி, சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி, நகராட்சி தொடக்கப் பள்ளி, சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற முகாம்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, புதிய வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் சேர்த்திட வீடு, வீடாகச் சென்று தகவல் சேகரிக்குமாறும், உரிய படிவங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பணிகளை மேற்கொள்ளுமாறும், பதிவேடுகளை முறையாக பராமரிக்குமாறும் அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார், வட்டாட்சியர்கள் குமார ராஜா, ஜான் மனோகர், நகராட்சி ஆணையர் சர்தார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.