சுடச்சுட

    

    பூரண மதுவிலக்கு கோரி தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம்

    By அன்னூர்,  |   Published on : 21st September 2015 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை புறநகர் வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கணேசபுரத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் அன்னூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அன்னூர் ஒன்றிய துணை தலைவர் பார்த்திபன் வரவேற்றார். கோவைமாவட்ட பொறுப்பாளர் ஈரோடு ஆறுமுகம் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி மற்றும் இரண்டு சக்கர வாகன பேரணியை துவக்கி வைத்தார்.

    இரண்டு சக்கர வாகன பேரணி அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

    இந்நிகழ்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால், செல்வராஜ், புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அமைப்பு தலைவர் சுரேஷ்குமார், மாணவர் அமைப்பு தலைவர் நவீன், தியாகுராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai