சுடச்சுட

    

    மெட்ராஸ் ரெஜிமெண்ட் வெற்றி தினக் கொண்டாட்டம்

    By குன்னூர்,  |   Published on : 21st September 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மெட்ராஸ் ரெஜிமெண்ட் வெற்றி தினக் கொண்டாட்டம் குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கடந்த 1965-ஆம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, பாகிஸ்தான் வசமிருந்த ஜம்மு காஷ்மீரின் காலிதார் ராணுவ முகாமை கர்னல் சி.பி.ஏ.மேனன் தலைமையிலான இந்திய ராணுவத்தினர் கைப்பற்றினர்.

    இந்தப் போரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 2 இளநிலை அதிகாரிகள், 8 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதன் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 19, 20-ஆம் தேதிகளில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வெற்றி தினக் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.

    இதன்படி, சனிக்கிழமை இரவு, ராணுவ வீரர்களின் பேண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் மெட்ராஸ் ரெஜிமெண்டின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எல்.நரசிம்மன் தலைமையில் மூத்த ராணுவ அதிகாரிகள் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், ராணுவ மையத் தலைவர் எஸ்.கே.சங்வான், முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai