சுடச்சுட

    

    நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில், விலையில்லா தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் ஒய்.சத்தார் தலைமை வகித்தார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஒய்.எஸ்.சையது முபாரக் முன்னிலை வகித்தார். தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூனன், நகர்மன்றத் தலைவர் டி.சரவணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

     இதில், துணைத் தலைவர் எல்.மணி, ஏடிபி மாநிலச் செயலாளர் பி.ஜெயராமன், அவைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     நிகழ்ச்சியையொட்டி, 200 பேருக்கு மாவட்ட அதிமுக சார்பில் விலையில்லா தலைக்கவசம் வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai