சுடச்சுட

  

  குன்னூர் தேயிலைக் கிடங்குகளை இடமாற்றும் திட்டத்தை கைவிடக் கோரிக்கை

  By உதகை  |   Published on : 22nd September 2015 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூரில் உள்ள தேயிலைக் கிடங்குகளை மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளுக்கு இடம் மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என டீ செஸ்ட் லிப்ட்டர்ஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.

   உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டீ செஸ்ட் லிப்ட்டர்ஸ் யூனியன் அமைப்பினர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

   குன்னூரில் 22-க்கும் மேற்பட்ட தேயிலைக் கிடங்குகள் உள்ளன. இக்கிடங்குகளில் மாவட்டம் முழுதும் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என 2,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

   இந்நிலையில், தேயிலைத் தூள் சேமிப்புக் கிடங்குகளை இடமாற்றம் செய்வதற்கு தேயிலை வாரியம் அளித்துள்ள அனுமதியின்பேரில், காரமடை பகுதியில் 3 கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், குன்னூரில் இத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

   எனவே, இப்பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு காரமடையில் அமைந்துள்ள கிடங்குகளை மீண்டும் குன்னூருக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   தனியார் தேயிலைக் கிடங்குகளில் போதிய அளவு கொள்ளளவு இல்லை என்றால் அரசின் சார்பிலேயே தேயிலைக் கிடங்குகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது மாற்றப்பட்டுள்ள கிடங்குகளால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், கிடங்குகளை மாற்றுவதற்கு இனிமேல் தேயிலை வாரியம் சார்பில் அனுமதி வழங்குவதை தடை செய்வதோடு, இதுபோன்ற பிரச்னைகளில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai