Enable Javscript for better performance
குன்னூர் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு

    By குன்னூர்  |   Published on : 22nd September 2015 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டிஃபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ் என்றழைக்கப்படும் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சர்வதேச அளவிலான போர் யுக்திகள் குறித்த கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

    இக்கருத்தரங்கிற்கு, ராணுவப் பயிற்சிக் கல்லூரித் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் காடியோக் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, டேராடூன் ராணுவ அகாதெமியின் முன்னாள் கருத்துரையாளர் மாரூப் ராஜா பங்கேற்று பல்வேறு போர் யுக்திகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதுகுறித்து, ராணுவப் பயிற்சி கல்லூரியின் தலைவர் காடியோக் செய்தியாளர்களிடம்  கூறியது: சர்வதேச அளவிலான இந்த ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பல்வேறு ராணுவப்    பயிற்சி  நிபுணர்கள் வருகை தந்து கருத்துரை வழங்குவர். அதன் ஒரு பகுதியாக முப்படை வீரர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கடந்த கால நிகழ்வுகள், நிகழ்கால சூழ்நிலைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    இதுபோல, போர் யுக்திகள் குறித்த கருத்துப் பரிமாற்றம் ராணுவப் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai