சுடச்சுட

  

  குன்னூர் நிக்கல்சன் கூட்டுறவுச் சங்கம் சார்பில், இச்சங்கத்தை உருவாக்கிய பெட்ரிக் நிக்கல்சன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

   1848-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி பெட்ரிக் நிக்கல்சன் பிறந்தார். இவர், குன்னூரில் வசித்து வந்த நிலையில், 1936-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி நீலகிரி மக்களின் நலன் கருதி மண்ணெண்ணெயை மானிய விலையில் வழங்கினார்.

   1904-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கத்தை துவக்கினார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் அரசு சார்பில் துவங்கத் தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டார். இதனால், இவர் கூட்டுறவுச் சங்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டார்.

   விழாவையொட்டி, குன்னூரில் உள்ள அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

  இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் முருகன், தலைவர் லூயிஸ், துணைத் தலைவர் பியாராபாய், இயக்குநர்கள் சிவா, உமா, மெகருநிஷா, கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான, ஏற்பாடுகளை சங்க மேலாளர் அந்தோணி செய்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai