சுடச்சுட

    

    கோத்தகிரியில் கரடி தாக்கி பெண் காயம்: டேன் டீ தொழிலாளர்கள் சாலை மறியல்

    By கோத்தகிரி  |   Published on : 22nd September 2015 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியில் கரடி தாக்கி பெண் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, டேன் டீ தொழிலாளர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோத்தகிரியை அடுத்துள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (52). இவரது மனைவி வசந்தா (45). இவர்கள் பரவக்காடு பகுதியிலுள்ள டேன் டீ தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றனர்.

    வெளியூர் சென்றிருந்த தட்சிணாமூர்த்தியும், வசந்தாவும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினர். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி திடீரென வசந்தாவை தாக்கியுள் ளது. அவர்களது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர் ஓடி வந்து கரடியை விரட்டியுள்ளனர்.

    அதைத் தொடர்ந்து, கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்த வசந்தாவுக்கு டேன் டீ மருத்துவமனையில் முதலுதவி அளித்து, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில், வனத்துறை, டேன் டீ நிர்வாகத்தை கண்டித்தும், கரடியை உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தியும் டேன் டீ தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொணவக்கரை ஊராட்சித் தலைவர் குப்புசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    தொழிலாளர்களின் இந்த மறியல் போராட்டத்தின்போது டேன் டீ நிர்வாகத்தினரோ, வனத் துறையினரோ சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai