Enable Javscript for better performance
கோத்தகிரியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

     டானிங்டன் பகுதியில் துவங்கப்பட்ட இந்த ஊர்வலத்திற்கு, அனுமன் சேனா மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ஸ்ரீதர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

     ஊர்வலமானது காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாகச் சென்று உயிலட்டி நீர்வீழ்ச்சியில் 30 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதில், அனுமன் சேனா மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai