சுடச்சுட

    

    கோத்தகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

     ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எ.சுதாகர் தலைமை வகித்தார். கீழ் கோத்தகிரி ஒன்றியச் செயலர் சுப்பிரமணி, ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஆர்ப்பாட்டத்தில், ராஜபக்சேவை கண்டித்தும், ஐ.நா. நீதிமன்றத்தில் விசாரித்து கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பசுந்தேயிலைக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பல்வேறு காலனி பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். காக்காசோலை மயானத்திற்கு நடைபாதை வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     இதில், நிர்வாகிகள் பாஸ்கர், கணேஷ், இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai