சுடச்சுட

    

    தமிழக முதல்வரின் தகுதிப் பரிசு பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது:

     2015-16 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ. 3,000 வழங்கப்பட்டு வருகிறது.

     இத்திட்டத்தின்கீழ், 2015-ஆம் ஆண்டிற்கான பிளஸ் 2 படிப்பில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் மாணவர்களுக்கு 1087-ம், மாணவிகளுக்கு 1106-ம் ஆகும். இதில், தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்றவராக இருத்தல் வேண்டும்.

     எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தின் தலைவர் மூலமாக நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai