சுடச்சுட

    

    கல்லூரியில் போராட்டம்: மாணவர்கள் இருவர் இடைநீக்கம்

    By கூடலூர்  |   Published on : 23rd September 2015 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூர் பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் இருவரை கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் எல்.ரமேஷ் கூறியதாவது:

    இக்கல்லூரியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, மாணவர்களைப் போராட்டத்திற்கு தூண்டியது தொடர்பாக இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகள் வழக்கம்போல இயங்கின என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai