சுடச்சுட

    

    குன்னூர் நகராட்சியைக் கண்டித்து 26-ஆம் தேதி திமுகவினர் உண்ணாவிரதம்

    By குன்னூர்  |   Published on : 23rd September 2015 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் நகராட்சியைக் கண்டித்து செப்டம்பர் 26-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குன்னூர் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவைத் தலைவர் தாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இக்கூட்டத்தில், குன்னூர் நகரப் பகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. நகரில் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. மேலும், பல இடங்களில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவற்றைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம் மற்றும் டெபாஸிட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் 26-ஆம் தேதி வி.பி. தெருவிலுள்ள கலைஞர் திடலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai