சுடச்சுட

    

    கூடலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வருவாய்த் துறை சார்பில் கூடலூரில் பேரணி நடைபெற்றது.

    பேரணியை கூடலூர் கோட்டாட்சியர் வெங்கடாசலம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரணி நகராட்சி வளாகத்தில் துவங்கி நகரின் முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் முடிவடைந்தது.

    இதில், நகர்மன்றத் தலைவர் ரமாமணி, துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கனிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், மோசஸ் மற்றும் வருவாய்த் துறையினர், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai