சுடச்சுட

  

  கோத்தகிரியில் திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மார்க்கெட் திடலில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, திராவிடர் கழக நகர அமைப்பாளர் அருணா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கருணாகரன், பகுத்தறிவுக் கழக மாவட்டத் தலைவர் புகழேந்தி, மாவட்டச் செயலர் வாசுதேவன், குன்னூர் நகர அமைப்பாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி நாகேந்திரன் வரவேற்றார். தலைமை நிலையப் பேச்சாளர் இராம.அன்பழகன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொருளாளர் பிறைநுதழ் செல்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.

  இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பெள்ளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் அரு.மண்ணரசன், திராவிடர் கழக ஒன்றியச் செயலர் வெங்கடேசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai