Enable Javscript for better performance
சுற்றுலாப் பயணி மாரடைப்பால் சாவு- Dinamani

சுடச்சுட

    

    புனேயிலிருந்து உதகை வந்த சுற்றுலாப் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.

    மகாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்தவர் மகேஷ் கிஷன் (63). வர்த்தகர். இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் தமிழகத்திற்கு கடந்த வாரம் சுற்றுலா வந்தார். ராமேஸ்வரம், கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள் திங்கள்கிழமை இரவு உதகைக்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

    செவ்வாய்க்கிழமை காலை, மகேஷ் கிஷன் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதித்துள்ளனர். அப்போது அவர், அதிகாலையிலேயே மாரடைப்பால் இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பான புகாரின்பேரில், உதகை மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai