சுடச்சுட

    

    நீலகிரியில் ரூ. 73 கோடிக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கல்

    By உதகை  |   Published on : 23rd September 2015 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 73 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

     இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது:

     நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதற்கட்டமாக 29,000 பயனாளிகளுக்கு ரூ. 3.45 கோடி மதிப்பில் மின்காந்த அடுப்புகளும், ரூ. 3.59 கோடி மதிப்பில் மிக்ஸிகளும், ரூ. 8.6 கோடி மதிப்பில் கிரைண்டர்களும் வழங்கப்பட்டன. 2-ஆவது கட்டமாக 42,000 பயனாளிகளுக்கு ரூ. 5.14 கோடி மதிப்பில் மின்காந்த அடுப்புகளும், ரூ. 4.97 கோடி மதிப்பில் மிக்ஸிகளும், ரூ. 8.92 கோடி மதிப்பில் கிரைண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

     3-ஆவது கட்டமாக 41,844 பயனாளிகளுக்கு ரூ. 5.12 கோடி மதிப்பில் மின்காந்த அடுப்புகளும், ரூ. 4.95 கோடி மதிப்பில் மிக்ஸிகளும், ரூ.8.96 கோடி மதிப்பில் கிரைண்டர்களும் வழங்கப்பட்டன. 4-ஆவது கட்டமாக 51,381 பயனாளிகளுக்கு ரூ. 4.9 கோடி மதிப்பில் மின்காந்த அடுப்புகளும், ரூ. 4.85 கோடி மதிப்பில் மிக்ஸிகளும், ரூ. 9.92 கோடி மதிப்பில் கிரைண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

     கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,64,225 பயனாளிகளுக்கு ரூ. 72 கோடியே 77 லட்சத்து 11 ஆயிரத்து 689 மதிப்பிலான விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

     இதன்மூலமாக கிராமப் பகுதிகளிலும், வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் பழங்குடியினர், பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். மின்காந்த அடுப்புகளை பெற்றுள்ளதன் மூலமாக அவர்கள் அடுப்பு எரிப்பதற்கான விறகின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai