Enable Javscript for better performance
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    By உதகை  |   Published on : 23rd September 2015 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

     இச்சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக தும்மனட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இரியன் ரவிகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

     அதேபோல, செயலராக ஆர்.ரவிசங்கர், பொருளாளராக எல்.சிவகுமார், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக கதிரவன், துணைத் தலைவர்களாக ஜெய்கணேஷ் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், இணைச் செயலர்களாக சுரேஷ் ராஜ்குமார், யசோதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     செயற்குழு உறுப்பினர்களாக மருத்துவர்கள் முருகேசன், ரமேஷ்குமார், லோகராஜ், மணிகண்டன், புகழேந்தி, ராஜ்குமார், அனிதா, கார்த்திக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai