சுடச்சுட

    

    குன்னூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

    By குன்னூர்  |   Published on : 24th September 2015 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மக்களவை உறுப்பினர் அலுவலகம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு, நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.  இதில், மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை, கூடலூர் ஆகிய தொகுதிக்கு உள்பட்ட மக்களின் நலன் கருதி குன்னூரில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் நாள்தோறும் தங்களது குறைகளை மனு மூலமாக அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில், நகரச் செயலாளர் ஒய்.சத்தார், கன்டோண்மென்ட் போர்டு துணைத் தலைவர் எம்.பாரதியார், நகர்மன்றத் தலைவர் டி.சரவணகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஒய்.எஸ்.சையது முபாரக், ஏடிபி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் பி.ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai