சுடச்சுட

  

  கோத்தகிரியில் அம்பேத்கர், பெரியார் சிலைகள் அமைக்கக் கோரிக்கை

  By கோத்தகிரி  |   Published on : 24th September 2015 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோத்தகிரியின் முக்கியச் சந்திப்புகளில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை அமைக்கக் கோரி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலர் ரா.பூவரசன் புதன்கிழமை கோத்தகிரி பேரூராட்சித் தலைவர், செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

   நீலகிரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் இதுவரை அம்பேத்கர், பெரியார் உருவச் சிலைகள் அமைக்கப்படவில்லை.  விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் அம்பேத்கர், பெரியார் உருவச்சிலைகள் அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.  எனவே, கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம், பேருந்து நிலையம், மார்க்கெட் திடல் ஆகிய பகுதிகளில் இவர்களது சிலை அமைக்க அனுமதியும், அதற்கான சிறப்பு தீர்மானத்தையும் வரும் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றி வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai