சுடச்சுட

    

    செப். 30-இல் கோவையில் தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

    By உதகை  |   Published on : 24th September 2015 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தபால் துறை வாடிக்கையாளர்களின் குறை தீர்ப்பு நாள் கூட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி (புதன்கிழமை) கோவையில் நடைபெறவுள்ளது.

    இதுதொடர்பாக, கோவை மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. இதில், இம்மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கான வாடிக்கையாளர் குறை தீர் கூட்டம், கோவையில் உள்ள மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    எனவே, நீலகிரி மாவட்ட மக்களுக்கு அஞ்சலக சேவை தொடர்பாக புகார், குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை கடிதம் மூலமாக உதவி இயக்குநர், மேற்கு மண்டலம், கோவை-641 002 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai