சுடச்சுட

    

    தென்னிந்திய தோட்டத் தொழில் அதிபர்கள் சங்க மாநாடு தொடக்கம்

    By குன்னூர்  |   Published on : 24th September 2015 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூரில் தென்னிந்திய தோட்டத் தொழில் அதிபர்கள்  சங்கத்தின் 122-ஆவது மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

    இதில், தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் புதிய தொழில்நுட்பக் கருவிகள் மூலமாக தோட்டத் தொழிலை மேம்படுத்துவது, அதிநவீன பூச்சிக்கொல்லி மருந்துகள், தேயிலை உற்பத்திக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் குறித்த சிறப்பு  கண்காட்சியை உபாசி சங்கத் தலைவர் விஜயன் ராஜேஷ் திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து, தேயிலை ரப்பர், காப்பி, வாசனை திரவிய வாரியத் தலைவர்கள், நிபுணர்கள் சிறப்புரையாற்றினர். இதில், தற்போதுள்ள சூழலில் தோட்டத் தொழில் நிறுவனங்கள் எதிர் கொண்டுள்ள சவால்களை முறியடித்து இத்தொழிலை லாபகரமாக தொடரும் வகையிலான புதிய தொழில்நுட்ப முறைகள் குறித்து  பேசினர். 

    இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் மாநாட்டில் தேசிய பெண்கள் அமைப்பின் கமிஷன் தலைவர் லலிதா குமாரமங்கலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார்.  தொடர்ந்து, 11-ஆவது தங்க இலை விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai