சுடச்சுட

  

  அத்திக்குன்னா பகுதியில் அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு

  By கூடலூர்  |   Published on : 25th September 2015 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா பகுதியில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

  அத்திக்குன்னா பகுதியிலிருந்து காலை 6.15 மணிக்கு இயக்கப்பட்ட பேருந்தின் நேரம் காலை 5.45 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனால், அந்தப் பேருந்தில் வேலைக்குச் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் பேருந்தின் நேரத்தை மாற்றியமைக்கக்கோரி பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து துறைக்கு மனு அளித்தும் எவ்விதப் பயனும் இல்லை.

  இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்த தேவாலா காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போக்குவரத்துக்கழக நிர்வாகத்திடம் பிரச்னை குறித்துப் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai