Enable Javscript for better performance
இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி நினைவஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    குன்னூரில் இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி நினைவஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

    கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன், 50-ஆம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டம் ராணுவப் பயிற்சிக் கல்லூரித் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே.கடியோக் தலைமையில் குன்னூர் போர் நினைவுத் தூண் சதுக்கத்தில் நடைபெற்றது. 

    இதில், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில், மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத் தலைவர் எஸ்.கே.சாங்குவான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai