சுடச்சுட

  

  தேயிலைக் கிடங்குகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் போராட்டம்

  By குன்னூர்  |   Published on : 25th September 2015 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலைக் கிடங்குகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமைப் பணித் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

  குன்னூரில் செயல்பட்டு வந்த 22-க்கும் மேற்பட்ட தேயிலைக் கிடங்குகள் மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனால், இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

  இதையடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட கிடங்குகளை மீண்டும் குன்னூருக்கே மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 18  நாள்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், வெள்ளிக்கிழமை குன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்கிடையே சிஐடியு தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குன்னூர், ஹாஸ்பிடல் கார்னரில் இருந்து வி.பி. தெரு வரை கண்டன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தொழிற் சங்கத் தலைவர் ஆல்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் டில்லி பாபு பங்கேற்றுப் பேசினார்.

  கனமழை பெய்த நிலையில் தொழிலாளர்கள் குன்னூர் அரசு மருத்துவமனைப் பகுதியில் இருந்து ஊர்வலமாக மவுண்ட்ரோடு வழியாக பேருந்து நிலையம் வந்து, வி.பி.தெருவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தொடர்ந்து, கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

  இதில், சிஐடியு பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai