சுடச்சுட

  

  தோட்டத் தொழிலை மேம்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: லலிதா குமாரமங்கலம்

  By குன்னூர்  |   Published on : 25th September 2015 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தோட்டத் தொழிலை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.

  தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 122-ஆவது மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கோல்டன் லீப் போட்டியில் வெற்றி பெற்ற உற்பத்தியாளர்களுக்கு தங்க இலை விருதுகளை வழங்கி லலிதா குமாரமங்கலம் பேசியதாவது:

  தோட்டத் தொழிலில் 70 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வாசனை திரவியங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிகப்படுத்தி தோட்டத் தொழிலை காப்பாற்ற வேண்டும். தற்போது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சுமூக உறவு உள்ளது. தோட்டத் தொழில் மேம்பட மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும். இன்னும் இரண்டு மாதங்களில் வணிகம், வர்த்தகத் துறையிடம் தேயிலைத் தொழில் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள அளிக்கப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai