சுடச்சுட

    

    பேருந்தில் சென்ற பள்ளி மாணவியின் கைவிரல் துண்டிப்பு

    By கூடலூர்  |   Published on : 25th September 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரில் அரசுப் பேருந்தில் சென்ற மாணவியின் கைவிரல் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள நாசர், ஆபிதா தம்பதியின் மகள் பைஸ்னா (13). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்ரீத் பண்டிகைக்காக பெற்றோருடன் அரசுப் பேருந்தில் கூடலூருக்கு வந்த பைஸ்னா, கூடலூரில் பேருந்திலிருந்து இறங்கும்போது பராமரிப்பின்றி இருந்த பேருந்தின் சிதைந்த பாகத்தில் அவரது கை சிக்கியது. இதில், பைஸ்னாவின் இடது கை ஆள்காட்டி விரல் துண்டானது.

    இதையடுத்து, மாணவியை துண்டிக்கப்பட்ட கை விரலுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப் பின்னர், அவரைக் கேரள மாநிலம், பெருந்தலமன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தி போக்குவரத்துக்கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவியின் மருத்துவச் செலவை ஏற்பதாக கிளை மேலாளர் ராஜ்குமார் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai