சுடச்சுட

    

    மூணாறு தேயிலைத் தொழிலாளர்கள் விவகாரம்: அடுத்த மாதம் நேரில் விசாரணை

    By குன்னூர்  |   Published on : 25th September 2015 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூணாறு தேயிலைத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் நேரில் விசாரணை நடத்தப்படும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    குன்னூரில் நடைபெற்ற தென்னிந்திய தோட்ட அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    தோட்டத் தொழிலில் பெண்கள் தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மத்திய அரசு சார்பில் குறிப்பாக வர்த்தக அமைச்சகம், தொழிலாளர் நல அமைச்சகம் ஆகியவை தொழிலாளர் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இதை தோட்ட அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் இணைந்து தொழில் மேம்பட முயற்சிக்கவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்தினால்தான் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க முடியும்.

    கேரள மாநிலம், மூணாறு பகுதியிலுள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெண் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அடுத்த மாதம் அங்கு சென்று நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்தும் ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களை இழிவுப்படுத்தி பேசும் முன் அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள் பலமுறை யோசிக்க வேண்டும். டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai