சுடச்சுட

  

  குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் பயிற்சி முகாம்

  By குன்னூர்  |   Published on : 26th September 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு துறையினருக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இப்பயிற்சி முகாமில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள், நலிவுற்ற பிரிவினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 2016 - 17-ஆம் ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் சமூகப் பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பில் மிகவும் நலிவுற்ற பிரிவினர்களாக கண்டறியப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், குடியிருப்பதற்கு வீடு அற்றவர்கள், ஆதரவற்ற விதவைகள், மனித கழிவுகளை அகற்றுபவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமையிலான குடும்பங்கள், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் ஆகியன குறித்து கணக்கெடுத்து, குடும்ப வாழ்வாதாரத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.  

  இக்கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வட்டார திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி குன்னூரில் நடைபெற்றது. பயிற்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் கந்தசாமி பயிற்சியளித்தார். இப்பயிற்சியில் ஊராட்சித் தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்கள், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai