சுடச்சுட

    

    கோத்தகிரியில் ஊராட்சித் தலைவர்களுக்கு பயிற்சி

    By கோத்தகிரி  |   Published on : 26th September 2015 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2016-2017-ஆம் ஆண்டு நிதித் திட்டத்தின்கீழ் மனித சக்தி மூலமாக வேலைசெய்தல் குறித்த பயிற்சியும், அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்தும், அக்டோபர் 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை வட்டார அளவிலான ஆய்வுக்குழு அமைத்தல் குறித்தும் இப்பயிற்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜ், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    இதில், அனைத்து ஊராட்சித் தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், ஊராட்சி மகளிர் கூட்டமைப்பினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், பணி தளப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai