சுடச்சுட

    

    உதகை ஜெ.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரி சார்பில் உலக மருந்தாளுநர்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதில், கல்லுரி மாணவ, மாணவிகள் உதகை, கேசினோ சந்திப்பில் மனிதச் சங்கிலி இயக்கம் நடத்தினர். பின்னர் உதகை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மருந்துச் சீட்டுகளில் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆர்.எக்ஸ். எனும் குறியீட்டின் வடிவத்தில் மனிதச் சங்கலி அமைத்து நின்றனர்.

    இதுகுறித்து, கல்லுரி முதல்வர் தனபால் கூறுகையில், "பார்மஸி படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு மருந்தின் தயாரிப்பு முறை துவங்கி, அதில் கலந்துள்ள வேதிப் பொருள்கள், அவற்றை எந்த நேரத்தில் உண்ண வேண்டும், அதை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் உள்பட அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும்.

    இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அனைத்து மருந்துக் கடைகளிலும் பார்மஸி படித்த மருந்தாளுநர்கள் மூலமாக மருந்துகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த மனிதச் சங்கிலி இயக்கம் நடத்தியுள்ளோம்' என்றார்.

    இந்நிகழ்ச்சியில், இந்திய மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தாமோதரன், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai