சுடச்சுட

    

    குன்னூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதம்

    By குன்னூர்  |   Published on : 27th September 2015 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூரில் திமுக சார்பில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

     போராட்டத்துக்கு, நகரச் செயலாளர் மு.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றியச் செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, வெங்கடேஷ், செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:

    குன்னூர் நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற காலகட்டத்தில் இருந்து இன்று வரை மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல் இருப்பதுடன் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பல இடங்களில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருவதை நகராட்சி கண்டுகொள்வது இல்லை. மேலும், வாகன நெரிசலை கட்டுப்படுத்த இன்று வரை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதுமட்டுமல்லாமல் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அப்பாவி மக்களின் கட்டடங்களுக்கு மட்டும் சீல் வைத்து அவர்களை துன்புறுத்தி வருகின்றனர்.

     நகர்ப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. மாறாக குடிநீர் கட்டணம், டெப்பாசிட் தொகையை பல மடங்கு உயர்த்தி மக்களை சிரமத்திற்குள்ளாக்கி உள்ளனர்.

     இதுதொடர்பாக, நகர்மன்றக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி அதிமுக கவுன்சிலர்கள் அராஜக செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது என்றார்.

    இப்போராட்டத்தில், மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai