சுடச்சுட

    

    2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: ஜான் பாண்டியன் பேட்டி

    By உதகை  |   Published on : 27th September 2015 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

     உதகையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் தெரிவித்ததாவது:

     2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். மது ஒழிப்பு குறித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இருப்பினும், போராட்டங்களை நடத்துவதால் மதுவை ஒழித்துவிட முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாகவே மதுவிலக்கு போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தேவையற்றது. மது அருந்துபவர்கள் திருந்தினால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும்.

     டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி போலீஸாரே சிறப்பாக விசாரித்து வருவதால், சிபிஐ விசாரணை கோருவது தேவையற்றது. உயர் அதிகாரிகள் அளித்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

     காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடகாவில் நடத்தப்படும் பந்த் தேவையற்றது. இதை அவர்கள் தொடர்ந்து அரசியலாக்கி வருகின்றனர். மத்திய அரசு இப்பிரச்னையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு மௌனம் சாதித்து வருகிறது.

     உதகையில் படகு இல்லத்தில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai