சுடச்சுட

  

  உதகையில் சர்வதேச சுற்றுலா தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

  இதையொட்டி, நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கி வைத்தார்.

  இப்பேரணியில், உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.

  உதகை ரயில் நிலையத்திலிருந்து சேரிங்கிராஸ் வரை நடைபெற்ற இப்பேரணியில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர், ஓட்டுநர் அமைப்புகளைச் சேர்ந்தோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  அதைத்தொடர்ந்து, நீலகிரி மலை ரயிலில் உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளையும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பாரம்பரிய முறைப்படி மலர்க்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்.

  இந்நிகழ்ச்சியில், சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் சங்கர், சுற்றுலா அலுவலர் (பொ) விஜயகுமார், உதவி சுற்றுலா அலுவலர்கள் துர்கா தேவி, செல்வராஜ், ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai