Enable Javscript for better performance
குன்னூரில் மலை ஏற்றப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் 7 பிராந்தியங்களுக்கு உள்பட்ட ராணுவ அணிகளுக்கு இடையேயான மலை ஏற்றப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ செயற்கை மலையில் நடைபெற்ற இப்போட்டியில் 7 அணிகள் பங்கேற்றன. தென்பிராந்திய அணி 90 புள்ளிகளைப் பெற்று கோப்பையை வென்றது. தொடர்ந்து, ராணுவ வீரர்களின் ஜிம்னாஸ்டிக், களரி வர்ம சாகச நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.

    ராணுவ சாகச மைய இயக்குநர் கர்னல் எஸ்.எஸ்.சுகிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ராணுவ மையத்தில் வீரர்களுக்கு இது போன்ற சாகச விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 2016-20 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறும் முன்னோட்டமாக இப்போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்ஆர்சி ராணுவ மையத் தலைவர் எஸ்.கே.சங்வான் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai