சுடச்சுட

    

    விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

    By கோத்தகிரி,  |   Published on : 28th September 2015 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியில் விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டம் அமலில் உள்ள நிலையில், விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கமிட்டியினர் கடந்த மாதம் உதகை, குன்னூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பான அறிக்கையை நீதி மன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

    இதேபோல, கோத்தகிரியில் தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் அவற்றை அழித்து அங்கு விதிமுறைக்குப் புறம்பாக கட்டடங்களை கட்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதில், சிலர் சாதாரண வீட்டிற்கான உரிமம் பெற்று விட்டு அங்கு ஆடம்பர தங்கும் விடுதிகள் கட்டி அதிக வாடகைக்கு விட்டுள்ளனர். அதேபோல, 1500 சதுர அடிக்கு உரி மம் பெற்று 3 முதல் 5 ஆயிரம் சதுர அடிவரை கட்டடங்கள் கட்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்னனர். எனவே, கோத்தகிரியிலும் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai