சுடச்சுட

    

    "இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர்': பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தகவல்

    By குன்னூர்  |   Published on : 29th September 2015 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோயால் இறப்பதாக, குன்னூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சேகர் தெரிவித்துள்ளார்.

     மத்திய சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ், குன்னூரில் பாஸ்டியர் ஆய்வகம் இயங்கி வருகிறது. இங்கு முத்தடுப்பு மருந்துகள் மட்டுமல்லாமல் வெறிநாய்க் கடிக்கு தடுப்பு மருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வெறிநாய்க்கடி மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டியரின் 119-ஆவது நினைவு நாள் தினத்தை முன்னிட்டு, பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சேகர் தலைமையில், ஆய்வக ஊழியர்கள் அவரது உருவச்சிலை முன் மௌன அஞ்சலி செலுத்தினர்.

     தொடர்ந்து, வெறிநாய்க்கடியை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    இதில், மாவட்ட சுகாதார துணை இணை இயக்குநர் பானுமதி, ஆய்வக மருத்துவர்கள் சுந்தரன், ஜீவா கலைச்செல்வன், அலுவலகக் கண்காணிப்பாளர் வைரமூர்த்தி, ஆய்வக ஊழியர்கள், பள்ளி, கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள், பொதுநல அமைப்பினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து, ஆய்வக இயக்குநர் சேகர் கூறியதாவது: ரேபிஸ் உயிர்க்கொல்லி நோயால், ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.

     தடுப்பு சிகிச்சை மூலமாக இந்நோய் வராமல் தடுக்கலாம். ரேபிஸ் நோய் கிருமி பாதிக்கப்பட்ட மிருகங்களின் உமில் நீர் மூலமாக பரவுகிறது. மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் 99 சதவீதம் நாய்க்கடி மூலமாகவே ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 17.4 மில்லியன் பேர் நாய்க்கடிக்கு உள்ளாகின்றனர்.

    இதில், 3 மில்லியன் நபர்கள் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். பெரும்பாலான வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது இல்லை. நாய்க்கடிக்கு உள்ளாகும் நபர்கள் பெரும்பாலும் 15 வயதிற்கு உள்பட்டவர்கள் தான். நாய் கடித்தவுடன் முதலுதவி மேற்கொள்வது அவசியம். ஆதரவற்ற நாய்களுக்காக மேற்கொள்ளப்படும் நோய்த் தடுப்பு, இனப்பெருக்க கட்டுப்பாட்டை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாய்க்கடி மற்றும் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக  சிகிச்சை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai